சிரித்துச் சிந்திக்கப் போவது யாரு? Jokes

சிரித்துச் சிந்திக்கப் போவது யாரு?

நீங்களா?  நடுவர்களா?

தொகுப்பாளரா?  தேர்ந்த அழைப்பாளரா?

கலப்பவரா?  கைதட்டுபவரா?

பார்ப்போமே!

எல்லாமே என் சொந்தக் கருத்துகள் மற்றும் அனுபவங்கள்,

இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

பாப்ரட்ரிக்

**********************************

நடுவர்: நீங்க என்னா செஞ்சி சிரிக்கவைக்கப் போறீங்க?

நான்: எல்லாரும் ‘ஸ்டான்டப்’ காமடிப் பண்ணுவாங்க, நான் வந்து ‘சிட்டவுன்’ காமடிப் பண்ணப்போறேன் சார்.

நடுவர்: அதென்ன ‘சிட்டவுன்’ காமடி? ஹி, ஹி….

நான்: எனக்கு வயசாய்டிச்சி சார், அதுதான் நாக்காலி கொண்டாந்திருக்கேன், ஒக்காந்துக்கிட்டு காமடிப் பண்ணப் போறேன் சார். அதுதான் ‘சிட்டவுன்’ காமடி.

நடுவர்: அப்ப ஒக்காந்து அடிங்க, வெடியுங்க!

நான்: சரி சார், நான் பாண்டிச்சேரி முத்தியால்பேட்டையிலேயே கொஞ்சம் வித்தியாசமான ஆளு சார்.

நடுவர்: ஹா! ஹா! ஹா! அப்ப நடத்துங்க! ஹா! ஹா! ஹா!

******************************************************************************************************************* வகிடா வழுக்கையா?

நீங்களெல்லாம் தலை வாறும்போது ‘கோடு’ எடுத்து வாறினால் அதற்கு ‘வகிடு’ என்றுப் பெயராம், அதையே கொஞ்சம் அகலமா நான் எடுத்து தலை வாறினால் அதற்குப் பெயர் வழுக்கையாம்? நீங்கள் ‘கோடு’ போட்டால் நான் ‘ரோடு’ போட்டிருக்கிறேன், அதிலேன்னத் தப்பு? (உண்மையில் நான் வாழுக்கைதான்)

இதுதான் அகல வகிடு!

*********

குடுகுடு கிழவி

நண்பன்: டேய்! உன் மனைவி ‘குடுகுடு’ கிழவி என்றாய், பார்க்கக அப்படித் தெரியவில்லையே!

நான்: அதில்லைடா! என் பொண்டாட்டி என்கிட்டே எப்பவுமே ‘காசுக்குடு, காசுக்குடு’ என்றுக் கேட்டுக்கொண்டே இருப்பா, அதுதான் ‘குடுகுடு’ கிழவி என்றேன்.

*********

கியாஸ்

அன்னாச்சி! எனக்குப் பின்னாடி ஒரே ‘கியாஸா’ப் போவுது அண்ணாச்சி, என்னப் பண்றதுன்னேத் தெரியிலேண்ண.

அதுக்கு ஏன்டாக் கவலைப் பட்ர, அத்தவச்சி நீ சம்பாதிக்கலாம், ஒரு பாக்கட்டு பலூன்கள் வங்கிக்க, ஒன்னொன்னா எடுத்து, உன்னோட ‘கியாஸை’ அதுலேப் புடிச்சி, புடிச்சி வித்துடு, நல்லக் காசு வரும்.

*********

நாற்காலி, மேஜை

நான்கு கால்கள் இருந்தால் ‘நாற்காலியாம்’, மூன்று கால்கள் இருந்தால் ‘முக்காலியாம்’, பின் அதே நான்கு கால்கள் இருக்கும் ‘மேஜை’யை, ‘நாற்கால்மேடை’ என்று ஏன் அழைக்கக் கூடாது?

*********

வயது

எண்ணிரண்டுப் பதினாறு வயது என்றால் அந்தப் பெண்ணுக்கு வயது என்ன?

பதினாறு!

அதுதான் இல்லை, முப்பத்திரண்டு,

எப்படி?

எண்ணி+இரண்டு+பதினாறு வயது = முப்பத்திரண்டு!

*********

ஆயிரத்தில் ஒருவன்!

உன்னை நான் சந்தித்தேன், நீ ஆயிரத்தில் ஒருவன் என்கிறாள்’ அதாவது   ஓருப் பெண் ஒரு ஆணைச் சந்தித்துப் பழகக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும், இவள் ஆயிரம் பேரை சந்தித்தபின்தான் இவனை,  நீ ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்கிறாள், அப்படியென்றால்  இந்தப் பெண்ணுக்கு இப்போது என்ன வயதிருக்கும்?  அதிலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்றுதான் சொல்கிறாளேத் தவிர நல்லவனா, கெட்டவனா என்றுச் சொல்லவில்லையே! எப்படி?

*********

கை விசிறி

“காத்தே வர்ல,  ஏங்க இந்தப் பனைமட்டை கைவிசிறியிலே ஏதோ எழுதியிருக்கே அது என்னாங்க?”

“அதுவா அது வந்து நம்ம ஊரு ‘மின்சார வாரியத் தலைமைப் பொறியாளருடையப் பெயரும், என்னோட நன்றியும்.”

“அவருக்கு எதுக்கு பேரும் நன்றியும்  இந்த விசிறியிலே!”

“அதாவது அவருதான் அன்பளிப்பா நம்ம எல்லாருக்கும் விட்டுக்கு இரண்டுன்னுக் கொடுத்தாரு, ஏன்னா! அவருக்குத் தெரியும் அவருக்குக் கீழே வேலைப் பாக்கரத் தான்தோன்றித் தீவட்டிகள் யாருமே சரியா வேலை பாக்க மாட்டங்க, அதனால மின்சாரம் அடிக்கடித் துண்டிக்கப்படும், நம்ம விசிறிக்கிறதுக்கு சௌகரியமா இருக்கட்டுமேன்னு, கொடுத்திட்டுப் போனாரு,

நல்ல மனுஷன், அவர் வாழ்க!  மட்டவிசிறி வாழ்க!

*********

விஷ ஜந்து

வீட்டிலிருக்கும் விஷ ஜந்துக்கள், பூச்சிகள், கொசுக்கள் இவைகளைக் கொல்ல, நான் சிலசமயம் மனிதர்களுக்குப் பாதிப்பில்லாத  மருந்துகள் அடிப்பதுண்டு.

அப்படி மருந்து அடிக்கும் போதெல்லாம் என் மனைவி, இந்த மருந்து அடிக்கும் போதெல்லாம் எனக்கு வாந்தி வருகிறது, தலை சுற்றுகிறது, மூச்சு திணறுகிறது, உடலெல்லாம் என்னவோ செய்கிறது என்பாள்.

பூச்சி, விஷ ஜந்துகளுக்கு மட்டுமே வேலை செய்யும் இந்த மருந்து இவளைப் பாதிக்கிறதேன்றால், இவள்தான் வீட்டிளிருக்கும் மிகப் பெரிய விஷஜந்துவோ?!

*********

வலி, வலி!

ஒருநாள் நான் இரண்டு சக்கர வாகனத்தில் என் மனைவியுடன் சென்றபோது, குறுக்கே வந்த வேகமான ஒரு வாகனம் தவறுதலாக என் வாகனத்தின் முன் சக்கரத்தைத் தட்டிவிட்டுத் தப்பிச்சென்றதால், வாகனத்துடன் நாங்கள் இருவரும் சாலையில் விழுந்தோம். என் வலது கால் வாகனத்தின் அடியில் மாட்டிக்கொண்டது, யாரோ வந்து என் வாகனத்தைத் தூக்கியபின்பு நான் எழமுயன்றேன், முடியவில்லை. அப்போதுதான் நான் அறிந்தேன் என் வலது கணுக்காலுக்கு மேலே கால் எலும்புகள் முறிந்துவிட்டன என்று.

யாரோ கூப்பிட்ட ஆட்டோவில் ஏறி மருத்துவமணை விரைந்தோம். எக்ஸ்ரே எடுக்கப்பட்டது, முதலுதவிகளுக்குப்பின் மூன்று மருத்துவர்களும் ஒரு சிஸ்டரும் என் காலுக்கு ‘மாவுக்கட்டு’ போடுவதற்கு வந்தார்கள். சிஸ்டர் என் கைகளைப் பிடித்துக்கொள்ள, மருத்துவர்கள் என் காலைப் பிடித்து நேராக்க இழுக்க இழுக்க, கத்தினேன், கத்தினேன் மருத்துவமணையே கிடுகிடுக்கக் கத்தினேன்!

வலி, வலி! அப்போது எனக்கு காலில் வலித்தது!

நான் கத்திக்கொண்டே இருக்கப் பக்கத்தில் என் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்த சிஸ்டர்,  ‘கத்தாதீர்கள் தாத்தா, தாத்தா, தாத்தா! என்று என் காதில் கத்திக்கொண்டிருந்தார். முன் தலையில் நான்கு முடி கொட்டிவிட்டால் நான் தாத்தாவா?

வலி, வலி! கால்வலியைவிட இது அதிகமாக எனக்கு காதில் வலித்தது!

நான் கத்துவதையும் சிஸ்டர் கத்துவதையும் பக்கத்தில் இருந்து என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். அதே சிஸ்டர் என் மனைவியிடம் ஒரு காகிதம் கொடுத்து மேடம்! இந்த மருந்துகளை வாங்கிவாருங்கள்’ என்றாள். என்ன அநியாயம்! அந்த சிஸ்டருக்கு  நான் ‘தாத்தா’வாம், என் மனைவி ‘மேடமாம்’, எப்படியிருக்கிறது? ஏன் அவளை ‘பாட்டி’ என்றுக் கூப்பிடவில்லை?

வலி, வலி! எல்லா வலிகளையும்விட இது அதிகமாக எனக்கு நெஞ்சில் வலித்தது!

***********

கெட்ட வாடை

‘அந்த அம்மா பக்கத்திலே போனாலே ஒரே கெட்ட வாடை வீசுதே ஏன்டி?’

‘அதுவா, அந்தம்மா ‘பப்ளிக் டாய்லட்’ போய்ட்டு வந்துச்சாம்’

‘ அதனாலென்ன, நாமக்கூடத்தான் போய்ட்டு வர்றோம், இப்பிடியா நாறும்?’

‘அதில்லடி, அந்தம்மா ‘பப்ளிக்ல’ துணியத்தூக்க வெக்கப்பட்டு…’

‘வெக்கப்பட்டுக்கிட்டு…?

‘துணியைத் துக்காமலேயே அப்படியே ஒக்காந்துட்டு வந்திருச்சாம்’

‘ச்சீ ச்சீ! கெட்ட வாடை’

**********

’‘COTடில்

(தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவர்களே இதை ரசிக்க முடியும்)

எனக்கு சிறுவயது முதலே அந்தக் காலத்தில் ‘COT’டில் படுத்துத் துங்கவேண்டுமேன்று ஆசை. அப்போதெல்லாம் கட்டில் வாங்கிப் படுக்க வசதியில்லை. என் தந்தை வங்கித் தரவில்லை. அது எனக்கு கனவாகவே இருந்தது. எனக்குக் கலியாணம் ஆனது, மாமனார் ‘COT’ வங்கித் தருவார் ‘COT’டில் படுத்து உறங்கலாம் எனறு எதிர்பார்த்து ஏமாந்தேன்.

இரவில் என் மனைவியுடன் தரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று என் காதில் ‘சர்ர்ர்.. புர்ர்ர்.. கொர்ர்ர்… என்று சிங்கம், புலி, கரடிகள் உறுமுவதுபோல் சப்தம் கேட்டு, எதோக் ‘காட்டில்’ படுத்திருப்பது போல் திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தால், என் மனைவி பக்கத்தில் நன்றாகக் ‘குறட்டை’விட்டுத் துங்கிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் எனக்குப் புறிந்தது, கடவுளிடம் நான் COT’டில் படுத்து உறங்க வேண்டுமேன்று வேண்டிக்கொண்டதைத் தப்பாகப் புறிந்துக்கொண்டு, அந்தக் ‘COT’டைக் கொடுப்பதற்கு பதில் இந்தக் ‘காட்’டைக் கொடுத்திருக்கிறார் என்று. இனி என் வாழ்நாள் முழுதும் நான் ‘காட்’டில் தான் தூங்க வேண்டும். வாழ்க ‘COT

**********

தூக்கல்!

“சார்! இவ்வளவு கூட்டத்திலே உங்க மனைவியை நான் எப்படிக் கண்டுபிடிச்சி இதை அவங்ககிட்ட எப்படிக் குடுக்கிறது சார்?”

“அது ஒன்னும் கஷ்டமில்லப்பா, அங்கே யாரு கண்ணிலே கண்ணாடிப் போட்டுக்கிட்டு, மூக்கு வழியாப் பாத்துக்கிடு நிக்குதோ அதுதாம்ப்பா எம் பொஞ்சாதி.”

(என் மனைவிக்கு முக்குக் கொஞ்சம் தூக்கல்)

கொஞ்சமா?..!_!

**********

முதலில் குடி

நானும் என் நண்பரும் குளிபானம் குடிக்கலாமென்றுக் கடைக்குப் போனோம். இரண்டு வாங்கி இருவரும் குடிக்க இரண்டுப் பேரிடமும் அதிகம் பணமில்லை. சரி, ஒன்று வாங்கி இருவரும் பாதிப் பாதி சாப்பிடலாமேன்றான் அவன்.

‘நீ முதலில் குடி’ என்றான் நண்பன். நான் ஸ்ட்ராவை அடியிலிட்டுக் குடிக்க ஆரம்பித்தேன், குடித்தேன், குடித்துக்கொண்டே இருந்து முழுவதும் காலியாகிவிட்டது.

‘என் பாதி எங்கே’ என்று அவன் கேட்க,

‘பாதிப் பாதி என்றுதான் சொன்னாயேத் தவிர எந்தப் பாதி உனக்கு என்றுக் கூரவில்லையே, நீ என்னை முதலில் குடிக்கச் சொன்னாய், அடியிலிருந்த என் பாதியை நான் குடிக்கும்போது, உன்னோட மேல் பாதியும் அதுகூட வந்துவிட்டது’ என்றேன்.

**********

Be the first to start a conversation

Leave a comment